கொழும்பு பிரதேசத்திலுள்ள பல பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் அண்மையில் நகர முதல்வரின் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது;
நான் ஒரு முஸ்லிம் நகர பிதாவாக இருந்தாலும் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர்களையும் மனிதனாகவே நேசிக்கின்றேன். நான் மக்களுக்கு சேவை செய்யும் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்றே சேவை செய்து வருகின்றோம்.
கொழும்பு நகரில் வாழும் சகல இன மக்களையும் ஒற்றுமையாக வாழவைக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமையாகும் என்றாலும் ஒரு சில பௌத்த மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றனர். சில பௌத்த பிக்குகளும் இதனால் புரிந்து கொள்ளவில்லை. எனது பார்வையில் இது சர்வதேச ஒரு சூழ்ச்சியாவே நோக்குகின்றேன். சில காலம் ஹலால் பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்தும் ஏதாவதொரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். அண்மையில் ஏற்பட்ட அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவங்களும் இவ்வாறானதொன்றே.
முப்பது வருடங்களாக நாட்டில் யுத்தம் நிலவியது. அக் காலப்பகுதியில் வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு பிரபாகரனினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முஸ்லிம்கள் பிரபாகரனுடன் சேர்ந்து யுத்தத்துக்கு உறுதுணையாக இருந்திருந்தால் முஸ்லிம்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. பிரபாகரனின் மிலேச்சத்தனமான பயங்கரவாதத்திற்கு முஸ்லிம்கள் உடந்தையாகாமல் இருந்த காரணத்தினாலேயே வடக்கிலிருந்து துரத்தப்பட்டனர். தற்போது இவை அனைத்தும் மறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அரந்தலாவில் பிக்குமார்களை வெட்டிக் கொன்றனர். காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிறு குழந்தைகளையும் சுட்டுக்கொன்றனர்.
பிரபாகரனுடன் சேர்ந்து முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடாத்தியிருந்தால் இந்நாட்டின் வரலாறே மாற்றப்பட்டிருக்கும். இந்நாடு இன்று இரு கூறுகளாகப் பிளவுபட்டிருக்கும். அதனைத் தடுப்பதற்கு நமது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு பிரபாகரனுக்கு எதிராகச் செயற்பட்டனர். எமது முஸ்லிம்கள் ஒரு போதும் தனி ஈழம் வேண்டுமென்று கேட்கவில்லை. எமது நாட்டுக்கு அதிகளவு உதவிகளையும் அந்நிய செலாவணியையும் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் நாடுகளேயாகும்.
பிரபாகரனுடன் சேர்ந்து முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடாத்தியிருந்தால் இந்நாட்டின் வரலாறே மாற்றப்பட்டிருக்கும். இந்நாடு இன்று இரு கூறுகளாகப் பிளவுபட்டிருக்கும். அதனைத் தடுப்பதற்கு நமது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு பிரபாகரனுக்கு எதிராகச் செயற்பட்டனர். எமது முஸ்லிம்கள் ஒரு போதும் தனி ஈழம் வேண்டுமென்று கேட்கவில்லை. எமது நாட்டுக்கு அதிகளவு உதவிகளையும் அந்நிய செலாவணியையும் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் நாடுகளேயாகும் என்று கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment