இலங்கையில் ஜிஹாத் அமைப்பு இல்லை. அதனை
உருவாக்குவதற்கே சிங்கள தீவிரவாதிகள் முயற்சிக்கிறார்கள். ஜிஹாத் இயக்கம்
இங்கு உருவானால் சிங்கள தீவிரவாதிகளுக்கு ஓடுவதற்கு வீதிகள் போதுமானதாக
இருக்காது. இலங்கை மட்டுமன்றி முழுப் பிராந்தியமுமே இதன்மூலம்
இருளாகிவிடுமென கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன சிங்கள
நாளிதழ் ஒன்றுக்களித்த பேட்டியிலே இவ்வாறு தெரிவித்துள்ளர்.
ஜிஹாத் இலங்கையில் இல்லை. அதனை உருவாக்கவே சிங்கள தீவிரவாதிகள்
முயலுகிறார்கள். ஜிஹாதை உலகின் பிரபல நாடுகளாலும் கட்டுப்படுத்த
முடியாதுள்ளது. இலங்கை மட்டுமல்ல முழுப்பிராந்தியமுமே இருள்
சூழ்ந்துவிடும். எனவே இந்த நாட்டு முஸ்லிம்களை தீவிரவாதத்திற்கு இழுத்துச்
செல்ல வேண்டாமென நான் சிங்கள தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
இன, மதவாதம் மூலம் நாடொன்றை முன்னேற்ற முடியாது. இறுதியில் இனவாதம்,
மதவாதத்திற்கு வழிவகுத்தோரும், நாடும் மக்களும் அதனால் அழிந்து விடுவது
நிச்சயம்.

0 comments:
Post a Comment