அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தன்னிடம் ரூபா ஒரு பில்லியன் மானபங்க நட்டஈடு
கேட்டு வழக்குத் தொடரவுள்ளதாக ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் எனக்
குறிப்பிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார
தேரர், தான் ராஜித்த
சேனாரத்னவுக்கு ஐந்து சதம் கூட கொடுக்க மாட்டேன்
எனவும், சிறைக்குச் செல்வது நான்தானா இல்லை ராஜித்தவா என்பதைப் பார்த்துக்
கொள்ளவியலும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவினால் நீண்ட காலமாக ஆய்வு செய்யப்பட்ட சிங்கள பௌத்தர்களுக்கு
எதிரான சூழ்ச்சிகள் பற்றிய கோப்பினை மல்வத்து மகாநாயக்க தேரரிடம்
ஒப்படைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கும்போது,
நாட்டைக் குட்டிச் சுவராக்கும் அடிப்படைவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து
அமைச்சர்கள் செய்கின்ற அக்கிரமங்களை வெளிக்கொணரும்போது, தன்னை
இழிந்துரைப்பதாகவும், தான் மதுபானம் அருந்துவதாக குற்றம் சாட்டுவதாகவும்,
அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு தான் பயப்படப் போவதில்லை எனவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)

0 comments:
Post a Comment