• Latest News

    August 30, 2014

    ஹெலியில் வந்து செல்பவர்களால் வடக்கு அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த முடியாது: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

    வடக்கு அபிவிருத்தியை ஹெலியில் வந்து செல்பவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணத்தின் மூலமே செய்ய முடியும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

     வட பகுதியின் அபிவிருத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணத்தின் மூலமே செய்விக்கப்படல் வேண்டும். ஆனால் இப்போது நடைபெறுவதோ தெற்கில் இருந்து ஹெலியில் வந்து தங்களின் சுய விளம்பர தேவைகளுக்காக வட பகுதியை கருவியாக பாவிப்பதால் வட பகுதி மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
    இந்த நாட்டு ஜனாதிபதியோ தன்னால் மாத்திரமே தீர்வு என்று கூறுகின்றார், நாம் அவருடன் 18 முறை பேச்சுவார்த்தை நடாத்தி இருக்கின்றோம் காலத்தை தட்டி கழித்துக் கொண்டு தீர்வை தர மறுக்கும் காரணத்தினாலேயே சர்வதேசத்தை நாம் இன்று நாடி நிற்கிறோம்.

    வெளிநாடுகளின் நெருக்குதலே இன்று அரசாங்கத்துக்கு இருக்கும் தலையிடி இவ்வாறு பருத்தித்துறை, தும்பளை தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் பற்றிக் உற்பத்தி நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்டு உறையாற்றும் போது கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில்,

    நாம் பல தடைகளை தாண்டி முன்னேற வேண்டிய நிலையில் உள்ளோம், தென் பகுதி அரசியல் வாதிகள் யாரோ கொடுக்கும் பணத்தில் யாரோ கட்டிமுடிக்க, யாரோ செலவு செய்ய, ஹெலிகப்டரில் உல்லாச பயணம் செய்து விளம்பரங்களை தங்களுக்கு தேடும் அரசியல்வாதிகள் தாங்களே அபிவிருத்தி செய்வதாக தம்பட்டம் அடிக்கின்றனர் என கூறினார்.

    இந்த விழாவில் மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனேகமானோர் கலந்துகொண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹெலியில் வந்து செல்பவர்களால் வடக்கு அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த முடியாது: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top