சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக
ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க
பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற
பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி
பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின்
புகைப்படத்தை மேலே வைத்து வணங்கிவிட்டு, கண்ணீர் மல்க, நா தழுதழுக்க உறுதி
மொழி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
தெரிவித்தார்..
பன்னீர் செல்வத்துடன் நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி
பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூ ராஜ், காமராஜ், தங்கமணி
உள்ளிட்ட 30 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அப்போது அவர்களும் கண் கலங்கினர்.
இலாகா, அமைச்சர்கள் மாற்றமில்லை
முந்தைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான
அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் அனைவரும் அப்படியே பன்னீர்
செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை.அதேப்போன்று அவரவர் ஏற்கனவே வகித்த இலாகாக்களே
ஒதுக்கப்பட்டுள்ளன.
பன்னீர் செல்வம் ஏற்கனவே வகித்த நிதித்
துறையுடன், ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவிக்கான அனைத்து இலாகாக்களையும் தன்
வசம் வைத்துள்ளார்.
30 அமைச்சர்கள் விவரம்:
முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டவர்கள் விவரம் வருமாறு:
1. நத்தம் விசுவநாதன்
1. நத்தம் விசுவநாதன்
2. வைத்திலிங்கம்
3. எடப்பாடி பழனிச்சாமி
4. பி.மோகன்
5. பா.வளர்மதி
6. பி.பழனியப்பன்
7.செல்லூர் கே.ராஜு
8. ஆர்.காமராஜ்
9. பி.தங்கமணி
10. வி.செந்தில்பாலாஜி
11. எம்.சி.சம்பத்
12. அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி
13. எஸ்.பி.வேலுமணி
14. டி.கே.எம்.சின்னையா
15. கோகுலஇந்திரா
16. சுந்தர்ராஜ்
17. செந்தூர்பாண்டியன்
18. எஸ்.பி.சண்முகநாதன்
19. என்.சுப்பிரமணியன்
20. ஜெயபால்
21. முக்கூர் என்.சுப்பிர மணியன்
22. ஆர்.பி.உதயகுமார்
23. கே.டி.ராஜேந்திர பாலாஜி
24. பி.வி.ரமணா
25. கே.சி.வீரமணி
26. ஆனந்தன்
27. தோப்பு வெங்கடா சலம்
28. பூனாட்சி
29. அப்துல்ரகீம்
30. விஜயபாஸ்கர்
3. எடப்பாடி பழனிச்சாமி
4. பி.மோகன்
5. பா.வளர்மதி
6. பி.பழனியப்பன்
7.செல்லூர் கே.ராஜு
8. ஆர்.காமராஜ்
9. பி.தங்கமணி
10. வி.செந்தில்பாலாஜி
11. எம்.சி.சம்பத்
12. அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி
13. எஸ்.பி.வேலுமணி
14. டி.கே.எம்.சின்னையா
15. கோகுலஇந்திரா
16. சுந்தர்ராஜ்
17. செந்தூர்பாண்டியன்
18. எஸ்.பி.சண்முகநாதன்
19. என்.சுப்பிரமணியன்
20. ஜெயபால்
21. முக்கூர் என்.சுப்பிர மணியன்
22. ஆர்.பி.உதயகுமார்
23. கே.டி.ராஜேந்திர பாலாஜி
24. பி.வி.ரமணா
25. கே.சி.வீரமணி
26. ஆனந்தன்
27. தோப்பு வெங்கடா சலம்
28. பூனாட்சி
29. அப்துல்ரகீம்
30. விஜயபாஸ்கர்
0 comments:
Post a Comment