நேற்று தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் மஸ்ஜித் மீது இனந்தெரியாத கும்பல்
ஒன்று குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக மஸ்ஜித் நிர்வாக சபைச்
உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் . நேற்றுதிங்கட்கிழமை (15.09.2014) அதிகாலை காலை 12.45 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
நேற்று அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாத கும்பல்கள் இப்பள்ளிவாசலில் இரண்டு குண்டுகளை வைத்துள்ளதாகவும் அதில் ஒரு குண்டு வெடித்ததில் பள்ளிவாசலின் சில பகுதிகள் சேதமாகியுள்ளது அவ்விடத்தில் இரண்டு பெட்ரோல் கலண்கள், டயர்கள், புடவை ஆகியவற்றை விட்டுச் சென்றுள்ளதாகவும் . அவைகளை வைத்துப் பார்க்கும்போது குறித்த நபர்கள் பள்ளிவாயலுக்கு தீ மூட்டி முற்றாக சேதப்படுத்தவே வந்துள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
தம்புளை பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது , தம்புள்ளை மஸ்ஜிதில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment