• Latest News

    May 03, 2025

    சம்மாந்துறை பிரதேச சபையில் எல்லா வட்டாரங்களையும் வெல்லக் கூடிய வாய்ப்பு நமது அணிக்கு இருக்கின்றது - பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன்

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சமமாந்துறையில் (02.05.2025) நேற்று இரவு நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் பேசிக் கொண்டிருக்கின்ற போது, ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி நேரம் முடிவடைந்து விட்டதென்று பொலிஸார் ஒலி பெருக்கியை நிறுத்தினர். 

    இவ்வேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

    இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் ஒலி பெருக்கி இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து 11.40 மணியளவில் றிசாட் பதியூதீன் வருகை தந்து ஒலி பெருக்கி இல்லாமல் பேசினார். பெருந்தொகையான மக்கள் அவரது உரையை கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் உரையாற்றுகையில்,


    வெள்ளிக் கிழமைகளில் 12 மணிவரை பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவது வழமை. ஆனால், சம்மாந்துறையில் மட்டும்தான் பொலிஸார் 11 மணிக்கே வந்து ஒலி பெருக்கியை நிறுத்திவிட்டார்கள். இதற்கு பின்னால் யாரோ சதி செய்து கொண்டிருக்கின்றார்கள். 


    சம்மாந்துறை பிரதேச சபையில் எல்லா வட்டாரங்களையும் வெல்லக் கூடிய வாய்ப்பு நமது அணிக்கு இருக்கின்றது. சமூக உணர்வுள்ளவர்களை உங்களுக்கு வேட்பாளர்களாக தந்துள்ளோம்.

    இரவு 12 மணிவரை பேசுவற்கு அனுமதி தந்திருக்க வேண்டும். இதற்கு எதிராக எங்களது கட்சி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யும். 

    பொறுமையாக இருங்கள். வெற்றி எமது கண்ணுக்கு முன் தெரிகின்றது. எம்மோடு மக்கள் இருக்கின்றார்கள். எமக்கு வாக்களிக்கின்ற போது நான்கு வருட திட்டத்தை வகுத்து அபிவிருத்தி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர்  ஆட்சியை கொண்டு செல்ல முடியாதவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளார்கள். அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர்கள் இருப்பதாக கூறுகின்றார்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் போது தகுதி தெரியாதா என்று கேட்கின்றோம்.

    இப்போது தேசிய பட்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு சபையை வென்று தாருங்கள் பாராளுமன்;ற உறுப்பினர் பதவி தருவதாகக் கூறிகின்றார். 

    மாகாண சபையை பற்றி கூறுகின்றார்கள். இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


     

     

    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை பிரதேச சபையில் எல்லா வட்டாரங்களையும் வெல்லக் கூடிய வாய்ப்பு நமது அணிக்கு இருக்கின்றது - பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top