• Latest News

    December 06, 2015

    மொழி ஆளுமையினால் சமூகங்களுக்கிடையில் உறவுப்பாலமாக இருந்தவர் மசூர் மௌலானா : சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்

    (எஸ்.அஷ்ரப்கான்)
    மொழி ஆளுமையினால் சமூகங்களுக்கிடையில் உறவுப்பாலமாக இருந்தவர் மர்ஹும் நாவலர் மசூர் மௌலானா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

    தனக்குள் இருந்த ஆளுமையினால் மருதமுனை மக்களுக்கு பல சேவைகளைப் புரிந்த மறைந்த செனட்டர் மசூர் மௌலானாவின் பிரிவு மருதமுனை மக்களுக்கு மாத்திரமின்றி முழுக் கல்முனைக்கும் பேரிழப்பாகும்.

    சிறுவயதில் அரசியலில் கால்பதித்து மரணிக்கும் வரை இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பாக தமிழ், முஸ்லிம் அரசியலில் பேசப்பட்ட ஒரு ஆளுமையே மர்ஹும் மசூர் மௌலானா ஆவார்.

    அவர் தனது 17வது வயதில் தமிழ் அரசியல் உலகின் மறவாகத் தலைமையாக நினைவு கூறப்படும் தந்தை செல்வநாயகம் தலைமை வகித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைத்து அவரது அரசியல் பாசறையில் அனுபவம் பெற்றவர். தம்pழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட சாத்வீகப் பேராட்டங்களில் கலந்துகொண்டு தாக்குதல்களையும் உள்வாங்கியர்.

    அதுமாத்திரமின்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் பல தலைவர்களுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்த மர்ஹும் மசூர் மௌலான மறைந்த தலைவர் அஷ்ரபுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸின்  வெற்றிக்காக தோலோடு தோல்நின்று செயற்பட்டவர்.

    இவ்வாறு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டு தனக்கென அரசியல் தடங்களை பல்வேறு நிலைகளில் பதித்த அவர் நம் எல்லோரையும் பிரிந்து இறையடியெய்துவிட்டார்.

    மொழி புலமையினால் அனைத்து அரசியல் தலைமைகளுடனும் கௌரவமாக பழகி சமூக உறவுகளுக்கு பாலமாகவும் செயற்பட்டவர்;;. அரசியல் மேடைகளை அழகு ஆங்கில மொழியினால் அலங்கரித்தவர் அவர். இலங்கையின் அரசியலில் செனட்டர் பதவி வகித்த ஒரேயொரு முஸ்லிம் அரசியல் பிரமுகவரும் மசூர் மௌலானாதான் என்பது மருதமுனை மண்ணுக்கு கிடைத்த கௌரவமாகும்.

    இத்தனை அரசியல் பதிவுகளையும், அனுபவங்களையும், ஆளுமைகளையும் கொண்டு வாழ்ந்த மர்ஹும் மசூர் மௌலானவின் வெற்றிடம் நிரப்பப்பட முடியாததொன்று. அன்னாரின் மறுவுலக வாழ்வு ஈடேற்றம் பெற வேண்டுமென பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவினால் துயுரற்றுள்ள அவர்களது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மொழி ஆளுமையினால் சமூகங்களுக்கிடையில் உறவுப்பாலமாக இருந்தவர் மசூர் மௌலானா : சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top