இவ்வளவு
பெருமை மிக்க கிறிஸ் கெயின்ஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? சொன்னால்
நம்ப முடியாது, அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு உள்ள செய்தி தான் அது. கிறிஸ்
கெயின்ஸ் தற்போது ஒரு பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் வேலையையும், மணிக்கு
17 டொலர் என்ற விகிதத்தில் ட்ரக் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார்
என்பது தான்! அதுமட்டுமின்றி 44 வயதான இவரை தற்போது இங்கிலாந்து அதிகாரிகள்
மேட்ச் பிக்சிங் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இவரது நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள சக
வீரரான டியோன் நாஷ் ”அவரது நிலை எனக்கு வருந்ததக்கதாக உள்ளது, இந்த
நிலையில் இருக்கும் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவருக்கு எங்களால்
முடிந்த உதவியை செய்வோம். அவர் ஒரு சாம்பியன், அவர் இதிலிருந்து விரைவில்
மீண்டுவருவார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த
கிறிஸ் கெயின்ஸின் மனைவி மெல் க்ராஸர் ”அவருக்கு வேறு வழியில்லை அவர் இதனை
சந்தித்து தான் ஆக வேண்டும், நாங்கள் இப்போது சொந்த வீட்டில் கூட இல்லை
வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் மற்றும்
ஒருநாள் போட்டிகளில் 3000ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய
கிறிஸ் கெயின்ஸ் உலகின் சிறந்த சகலதுறை வீரராக ஓய்வு வரை கருதப்பட்டார்.
வண்டி ஓட்டி வாழ்க்கையை நடத்தும் இந்த சகலதுறை வீரரின் வாழ்க்கையில்
சோகத்திலிருந்து மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
0 comments:
Post a Comment