திருகோணமலை -புல்மோட்டை தள
வைத்தியசாலைக்கு இரண்டு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா
இன்று (02) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற இருந்தது.
ஆனாலும் புல்மோட்டை பகுதியிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதரவாளர்களினால் குதூகலமாக கொண்டாடப்படவிருந்த இந்நிகழ்வு இடை
நிறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான புல்மோட்டை பகுதிக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவர் மது போதையில் வருகை தந்து
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் முரண்பட்ட காரணத்தினால்
இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன்
அப்பகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைச்சர் மது போதையில் வருகை தந்து மக்கள் மனதை
துன்புறுத்தியதினால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் புல்மோட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வேண்டுகோள்
விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எவ்வளவு முன் மாதிரியாக
உள்ளார்கள் ஏன் கிழக்கு மாகாண இந்த அமைச்சர் அடாவடித்தனத்துடன்
செயற்பட்டு வருகின்றார் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வருகையை
எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியிலும் கசப்பு தன்மையை
ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்
அத்துடன் கிண்ணியா -மூதூர் பகுதிகளில் நாளை இடம்பெற உள்ள நிகழ்வுகளுக்கு ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் எனவும் முக்கிய பிரதி நிதியொருவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment