மொனராகலை
மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை பாதிக்கப்பட்ட ஏனைய
மாவட்டங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில்
இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த
மனுவை தாக்கல் செய்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், மொனராகலை
மாவட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த நிவாரண நிதியை வழங்குவது ஏனைய மாவட்ட
மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என மனுதார்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த நிவாரண நிதியை வழங்குமாறு கோரி இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment