• Latest News

    September 16, 2014

    அளுத்கமவில் ஷஹ்ரான் , ஷிராஸ் ஆகியோரை சுட்டுக் கொன்றவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

    அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அந்த பிரதேச மஸ்ஜித் ஒன்றை தாக்குதலில் இருந்து பாதுகாக்க  முற்பட்டபோது இவர்கள் மீது துபாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டனர் .

    இவர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவர் வாளினால் வெட்டப்பட்டே கொல்லப்பட்ட தாக சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை வழங்கியிருந்தார் இது பெரும் சர்ச்சயை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டதில் இவர்கள் அதி நவீன துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டமை நிரூபிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்தவர்களை கைது செய்து நீதி மன்றில் ஆஜர் படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்

    சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் ஆயிஷா  ஆப்தீன் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார். அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் சஹ்ரான்  மற்றும் மொஹமட் ஷிராஸ்  ஆகியோர் மஸ்ஜிதை பாதுகாக்கும் முயற்சியில் சஹீதாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது  .இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அளுத்கமவில் ஷஹ்ரான் , ஷிராஸ் ஆகியோரை சுட்டுக் கொன்றவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top