யு.எல்.எம். றியாஸ்:
நிந்தவூர் பிரதேசத்தில் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் 14வது நினைவு தினம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தலைமையில் நடைபெற்றது.
இன்று நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் தலைவர் தினம் எனும் தலைப்பில் நினைவுப் பேருரைகள் இடம்பெற்றன. நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட துஆப் பிராத்தனைகள் நடைபெற்றது. இதில் பைசால் காசிம் எம்.பி, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், உதவித் தவிசாளர் எம்.எம்.அன்சார், பிரதேச சபையின் உறுப்பினர்கள், ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அதிபர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்'டார்கள்.
இந்நிகழ்வுகளின் பிரதான நிகழ்வுகள் இன்று நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசியக் பாடசாலையில் தலைமையிலும் அதிபர் எம். அப்துல் லதீப் நிந்தவூர் அல்-மஸ்ஹர் உயர்தர பாடசாலையில் அதிபர் M.U.H.M சித்தீக் தலைமையிலும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது
0 comments:
Post a Comment