
மருதமுனை 03, ஸம்ஸம் வீதி, இலக்கம் 544 சேர்ந்த துறைமுக உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.வதுறுல் பௌஸ் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டள்ளார். இவர் அண்மையில் மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிமானம் செய்து கொண்டார். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் மருதமுனை ஹிதாயா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை, மருதமுனை அல்-மதீனா வித்தியாலய அபிவிருத்திக்குழு மற்றும் மானியங்கள் சமூக சேவைகளுக்கான வாரியம், மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினராகவும் செயற்படுவதுடன் யுனிவேஸ்
விளையாட்டுக் கழகத்தின் உப தலைவராகவும் பணிபுரிகின்றார். இவர் மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாலெப்பை மரைக்கார் உம்மு ஜெஸீமா தம்பதியின் புதல்வராவார்.
பி.எம்.எம்.ஏ.காதர்
0 comments:
Post a Comment