• Latest News

    October 25, 2014

    கருப்பு ஒக்டோபர்: வெளியேற்றப்பட்டு 24 வருட பூர்த்தி

    அபூ ஆயிஷா 1990 ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடமாகாணத்தில் வாழ்ந்த சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள்,  24 மணி நேர அவகாசத்தில்,  விடுதலைப் புலிகளால் சொத்துக்கள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில், உடுத்திய உடையுடன், சுமார் 300 ரூபா கைப்பணத்துடன் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். இம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் 24 வருடங்களாகின்றன.
    24 வருடங்களாக இம்மக்கள்வாழ்வதற்கு சொந்த இடமின்றி, தொழில் செய்வதற்கு தகுந்த தொழிலின்றி அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும்வாழ்ந்து வருகின்றனர். யுத்தம்முடிவுற்ற பின்னரும் ஏன்இம்மக்கள்சொந்த இடங்களில்மீள்குடியேறச்செல்லவில்லை.
    அங்குள்ள தொழில்களைச்செய்து தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளாமல்இருக்கிறார்கள். அங்குள்ள கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்துவதற்காக முயற்சிக்காமல்பு த்தளம் மற்றும் நாட்டின்ஏனை பகுதியிலுள்ள அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும்வாழ்கிறார்கள்? இவற்றுக்கான காரணம்என்ன?  இவற்றுக்குத்தீர்வே இல்லையா? என பலரும்பல கேள்விகளைத் தொடுத்த வண்ணமே உள்ளனர்.
    மீள்குடியேற்றத்தைத்தடுப்பதில்முதன்மையானது காணிப்பிரச்சினை 1990 ஆம்ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது சுமார் 75 ஆயிரத்திற்கும்அதிகமான மக்கள்இருந்தார்கள். அப்போது சுமார் 30  ஆயிரம்முதல் 35 ஆயிரம்குடும்பங்கள்தான்இருந்தன. இவை தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்தவர்களுக்கு குடியிருப்பதற்கு போதிய காணி வசதி இல்லை. இதுவரை அரசாங்கமும் அவற்றைத்தீர்த்து வைக்க முயற்சிக்கவுமில்லை.
    உதாரணமாக மன்னார்மாவட்டத்தில், மன்னார்தீவுப்பகுதி மற்றும் மாந்தைப்பகுதியில்மீள்குடியேறுகின்றவர்களுக்கு குடியிருப்புக்காணி மற்றும்ஏனைய அத்தியாவசியத்தேவைகள் இன்னும் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை. மன்னார் முசலி மற்றும் நானாட்டான் பகுதியில் குடியேறுகின்ற மக்களுக்கும்போதிய குடியிருப்புக்காணி வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் குடியிருப்புக்கான காணி வழங்கப்படவில்லை. இவர்கள்மீள்குடியேற வழியின்றி, இன்னும்புத்தளம்மற்றும்நாட்டின்ஏனை பகுதியிலுள்ள
    அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
    மேலும், முஸ்லிம்கள்வாழ்ந்த முக்கிய சில நகரங்கள், வீடுகள் உரியவர்களுக்கு இன்னும்வழங்கப்படாமல் கடற்படையினரின் பராமரிப்பில் இருக்கின்றன. அவர்களிடம் கேட்டால் அவைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவைகள்குறித்து முஸ்லிம்அரசியல்வாதிகளோ ஏனைய முஸ்லிம்சிவில்அமைப்புக்களோ இதுவரை எதுவும் பேசவுமில்லை, செய்யவுமில்லை. பாராளுமன்றத்தில் உயர்பாதுகாப்பு வலயங்கள் குறித்து எத்தனை முறை பேசப்பட்டுள்ளன. ஆனால், முஸ்லிம்பிரதேசங்களிலுள்ள உயர்
    பாதுகாப்பு வலயங்கள் குறித்து எந்த ப்பாராளுமன்ற உறுப்பினரும் பேசியதாக இல்லை.
    வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின்மீள்குடியேற்றத்தைத்தடுக்கும் காரணிகளில்இவை முக்கியமானதாகும். இவற்றை உரிய முறையில் தீர்த்துக்கொடுப்பது உரியவர்களின் கடமையாகும். இவற்றுக்கு நிரந்தரத்தீர்வின்றியே இம்மக்கள்அகதி முகாம்களிலும் தற்காலிக கொட்டில்களிலும் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
    மீள்குடியேறியவர்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள், இவைகளும் மீள்குடியேற்றத்தைத்தடுக்கின்றன. தொழில்பிரச்சினை விவசாயம் வடமாகாண முஸ்லிம்கள் மீன்பிடி, விவசாயம் என்பவற்றையே தமது ஜீவனோபாயத்தொழிலாகச் செய்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையும் ஏனையவர்கள் மீன்பிடியையுமே மேற்கொள்கின்றனர். அதுவும்வருடத்திற்கு ஒரு முறை மழையை நம்பி செய்யும்தொழிலாகவே விவசாயத்தொழிலைச் செய்கின்றனர். அத்தொழிலையும் திறம்படச் செய்வதற்கு போதிய வசதிகளின்றி அவதிப்படுகின்றனர்.
    சுமார் 20 வருடங்களாக செயலற்று இருந்த நீர்ப்பாசனக்குளங்கள் இன்னும்புனரமைப்புச்செய்யாப்படாமல் இருக்கின்றன. அவ்வாறே நீர்பாசனக்குளங்களிலிருந்து வயல்களுக்கு நீரைக்கொண்டு செல்கின்ற வாய்க்கால்களும் இன்னும் திருத்தியமைக்கப்படவில்லை. அதனையும் அந்தந்த காலங்களில் விவசாயிகளே திருத்தியமைக்கின்றனர்.
    இவ்வாறு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில்மேற்கொள்ளப்படுகின்ற விவசாயம்இறுதி நேரங்களில்போதிய நீரின்றி வாடி அழிகின்றன. அவ்வாறே அதிக மழை பெய்ததும் நீர்வழிந்தோடுவதற்கு போதிய வாய்க்காலின்மையாலும் இவர்களின் விவசாயங்கள் அழிந்துள்ளன.  கடும்மழையினாலும், கடும்வரட்சியினாலும் மீள்குடியேறிய விவசாயிகள் 2010 ஆம்ஆண்டு முதல் 2013 ஆம்ஆண்டு வரை பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இறுதியில் தொழிலைக்கைவிட்டு பாரிய நஷ்டத்தையும்அடைந்துள்ளனர்.
    இவ்வாறு மீள்குடியேறியவர்கள்விவசாயத்தில்எதிர்நோக்கும் பிரச்சினைகளைக்கண்ட முகாம்களில்வாழ்கின்ற வடமாகாண முஸ்லிம்கள்மீள்குடியேறுவது குறித்து பலமுறை சிந்திக்கின்றனர்.  இவர்களுக்கு அரசாங்கமும், எம் அரசியல்வாதிகளும் உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்களா? அவர்களின்மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்களா?
    தொழில் செய்வதில் பிரச்சினை 
    மீன்பிடி மீள்குடியேறிய பெரும்பாலான மீனவர்கள்தங்களது தொழில்களை மாற்றிக்கொள்ளலாமா என நினைக்கின்றனர். அதாவது, இந்திய மீனவர்களின்வருகையால் எம்மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை அரசாங்கமும்கண்டு கொள்ளாமல் இருப்பதாக அம்மீனவர்கள்தெரிவிக்கின்றனர்.
    அவ்வாறே இன்னும் கடற்படையினரின் பாஸ்நடைமுறையில் உள்ளது. அதாவது, கடற்படையினரிடம்பாஸ் எடுக்கின்றபோது தொழிலாளிகள் மூவரின் பெயர்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டவர்களேதான் தொழிலுக்குச்செல்ல வேண்டும். அவர்களில்ஒருவருக்கோஅல்லது இருவருக்கோசுகயீனம்ஏற்பட்டால் அன்றைய நாள்குறித்த நபர்இன்னொருவரை இணைத்துக்கொண்டு தொழிலுக்குச்செல்ல முடியாது. எனவே, அவரின்அன்றைய
    தொழில்பாதிப்படைகின்றது.
    இப்படி எத்தனையோதொழிலாளிகள் தொழில்களை இழக்கின்றார்கள். கடன்பட்டு ஆரம்பித்த தொழிலை கடன்சுமைகளையும் இறக்கிக்கொள்ள முடியாமல், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்விச்செலவு என பல சுமைகள்அவர்களின் முதுகுகளில்சுமத்தப்பட்டுள்ளதால்என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
    பாகுபாடு
    அத்தோடு, பெரும்பான்மை சமூகத்தவர்களின் வருகையால் இப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய கடற்றொழில் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டு அவர்களைச்சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நடைமுறை வடக்கில்பெரும்பாலான இடங்களில்காணப்படுகிறது. இவைகளை யாரிம்முறையிடுவது எனத் தெரியாமல்நாளாந்தம்மன வேதனையோடு வாழ்கின்றனர்.
    இவ்வாறு பாகுபாடாக நடந்து கொள்கின்றமையால் முஸ்லிம் மீனவர்கள் கடுமையாகப்பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் பிரச்சினைக்கு உன்மையான நிரந்தரத்தீர்வு கிடைக்குமா? அவர்களும்சுதந்திரமாக தொழில்செய்ய வாய்ப்பெடுத்திக் கொடுக்கப்படுமா? இவைகளுக்கு யார்பதில்சொல்லப்போகிறார்கள்?  என்ற கேள்விகளோடு அலைகடல்மேலே அலையாய்அலைவது போல்இவர்களது வாழ்வும் அலைகிறது.
    இவ்வாறான சூழ்நிலையும் ஏனைய முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கின்றது.  முஸ்லிம்கள் மீள்குடியேறக்
    கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறர்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
    கல்வி கற்க முடியாத நிலை
    வடக்கில்பெரும்பாலான முஸ்லிம்பாடசாலைகள் இன்னும் கட்டிட வசதிகளோ, துறைசார்பாட ஆசிரியர்களோ இன்றி காணப்படுகிறது.  இவ்விக்கட்டான சூழ்நிலையிலேயே மீள்குடியேறியவர்களின் பிள்ளைகள்கல்வியை கற்று வருகின்றனர். வடமாகாணத்தைச்சேர்ந்த தரமான துறைசார்பாட ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் புத்தளம்மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில்தொழில்செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
    அவர்களை வடமாகாணசபையின் கீழ் இயங்குகின்ற மாகாணப் பாடசாலைகளுக்கு மாற்றம்செய்து வடமாகாணத்தின் கீழ்கொண்டு வருவதற்கான எந்த முயற்சிகளும்எடுக்கப்படவில்லை. அவ்வாறு மாற்றத்தை மேற்கொண்டாலும், மீள்குடியேற வருகின்ற ஆசிரியர்கள்குடியிருப்பதற்கு காணி, வீடு இன்றி தவிக்கின்ற நிலையே காணப்படுகின்றது. இவைகளுக்கு யார்பொறுப்பு?
    சுமார் 20, 25 வருடங்களின்பின்னர் புத்தளத்திலோஅல்லது நாட்டின் ஏனைய பகுதியிலோஅரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒரு சில உதவிகளைக்கொண்டும், தங்களின்சம்பளத்தில்சிலவற்றையும் சேர்த்து கட்டிய வீட்டை விட்டு விட்டுட்டு, சொந்த இடத்தில் மீண்டும்காணி இன்றி, வீடின்றி அகதி வாழ்வொன்றை வாழ எந்த கற்ற மனிதன்தான் விரும்புவான். சொந்த இடத்தில்வாழ்கிறோம் என்ற பெருமைக்காக இவ்வாறான கஷ்டத்தை எதிர்நோக்கத்தான்வேண்டுமா?
    அவ்வாறுதான் கஷ்டத்தோடு சமூகக்கடமையைச்செய்தாலும் இந்த சமூகம்அந்த ஆசிரியர்களுக்கு என்ன உதவி உபகாரம்செய்யப் போகிறது?. துறைசார்பாட ஆசிரியர்களின்பற்றாக்குறையுடனும், பௌதீக வளப் பற்றாக்குறையுடனுமே வடமாகாண முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. இவைகளை கருத்தில்கொண்டும்வெளியேற்றப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள்மீள்குடியேறாமல், தொடர்ந்தும்  அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு தங்களது பிள்ளைகளின்கல்வியையாவது வழர்த்துக்கொள்ளலாம்என்ற நோக்கில்வாழ்கின்றனர். இப்பாடசாலைகளின்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்குமா?
    இப்பாடசாலைகளிலும்துறைசார்ஆசிரியர்கள்உட்பட போதிய வளங்கள் பகிரப்படுமா? இந்த அப்பாவி முஸ்லிம்களின்பிள்ளைகளும்கல்வியில் சிறந்து விளங்குவார்களா? இக்கேள்விகளுக்கு யார்பதில்சொல்லப் போகிறார்கள்?
    சுகாதாரம்: போதிய வைத்தியசாலை வசதிகள்இல்லை
    கடந்த 20 வருடங்களுக்கு மேல்காடுகளாகக்கப்பட்ட வடமாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள்தற்போது காடழிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் பல வகையான நச்சுப்பாம்புகள் மற்றும்ஏனைய ஊர்வனவும் வாழ்ந்துள்ளன. இந்நிலையிலேயே வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அமைகின்றது. எனவே, இவ்வாறான நச்சுப் ஊர்வனயினால் தாக்கப்பட்டால் அதற்கான உரிய வைத்தியம் பெறுவதற்கு போதிய வைத்தியசாலை வசதிகள்இல்லை.
    மேலும், பெரும்பாலான வடமாகாணமீள்குடியேற்றப்பிரதேசங்களில் போதிய வைத்தியசாலைகளே இல்லை. அவ்வைத்தியசாலைகளில்  வைத்தியர்களோ, தாதியர்களோ இல்லை. அவ்வாறு வைத்தியர்கள், தாதியர்கள் இருந்தாலும் அவர்களும் மாற்று மொழி பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
    அத்தோடு தாய்சேய்மருத்துவம் இன்னும்அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஒரு தாய்குழந்தைப்பேறுக்காக குறிப்பிட்ட
    பிரதேசங்களிலுள்ள அரசாங்க கிராமிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால், அத்தாயை பிரதான வைத்தியசாலைக்கு அழைத்துச்சொல்வதற்கான போக்குவரத்து வசதிகள்இல்லை. இக்காரணிகளும்பெரும்பாலானவர்களின்மீள்குடியேற்றத்தைத் தடுக்கின்ற முக்கிய நிகழ்வாகக்காணப்படுகின்றது.
     அரச நிர்வாகம்
    பெரும்பாலான மீள்குடியேற்றப்பிரதேசங்களிலுள்ள அரச நிர்வாகம் இவர்களின்மீள்குடியேற்றத்தில்மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கின்றனர். உதாரணமாக – மீள்குடியேறச்செல்பவர்களுக்கு முதலில்ஒரு தற்காலிக குடியிருப்பு வசதி, 25 ஆயிரம்பெறுமதியான வீட்டு உபகரணங்கள், குடிநீருக்கான வசதி என்பவற்றை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இது குறித்த பிரதேச செயலகத்தின் கடமையாகும்.
    ஆனால், மீள்குடியேற்றப்பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலாகங்கள் இச்சேவையை வழங்குவதில்பின்னிற்பதாக மக்கள்தெரிவிக்கின்றனர். இவ்வுதவியை அரச சார்பற்ற நிறுவனங்கள்செய்வதாக இருந்தாலும் அதற்கும்ஜனாதிபதி செயலகத்திடம்அனுமதி பெற வேண்டும் என்கின்றர். எனவே, இவ்வாறான நிர்வாக செயற்பாடும் இவர்களின் மீள்குடியேற்றத்தைக்குறைக்கின்றன.
    முடிவுரை
    சுமார் 20 வருடங்களாக யுத்தத்தின்காரணமாக சொந்த இடத்தில் மீள்குடியேற முடியாமல்தவித்த வடமாகாணமுஸ்லிம்கள், தற்போது யுத்தம்நிறைவு பெற்றுள்ள இந்நேரத்திலும்தமது சொந்த இடத்தில் மீள்குடியேறி சுதந்திரமாக வாழ்வதற்கு வழியின்றித்தவிக்கின்றனர். அவர்களின்மீள்குடியேற்றத்திற்கு காணி, தொழில், சுகாதாரம், கல்வி, நிர்வாகம்என பல்வேறு பிரச்சினைகள்தடையாக இருக்கின்றன.
    இவைகளை அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், முஸ்லிம்சமூக நிறுவனங்கள்தீர்த்துத்தருமா? அல்லது அவர்களை தொடர்ந்தும் அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக்கிராமங்களிலுமா வாழ வைக்கப் போகிறார்கள்என்ற ஏக்கத்தில்வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு அவர்களின்அரசியல்பிரதிநிதிகளின்பங்கு என்ன? என
    அவர்களே கேள்வி எழுப்புகின்றனர்.
    எனவே, 25 ஆவது வருடமும்இவர்கள்அழுவதே விதியென்றால், எம் தேசத்தினதும், எம்சமூகத்தினதும், எம்அரசியல்வாதிகளினதும் பொறுப்புத்தான்என்ன? என்று இம்மக்கள்அங்கலாய்க்கின்றனர். இன்றே இணைவோம், அவர்களின்கண்ணீரைத்துடைப்போம், அவர்களின் வாழ்வில்ஒளியேற்றுவோம். அனைவரையும்அழைக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கருப்பு ஒக்டோபர்: வெளியேற்றப்பட்டு 24 வருட பூர்த்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top