• Latest News

    October 20, 2014

    கிழக்கில் விரைவில் ஆட்சி மாற்றம்? 3 பேர் பெல்டி அடிக்க உள்ளார்களாம்?

    குருவி -
    கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை மாற்றியமைக்க திட்டிமிட்டுள்ளதாக விரைவில் பறி போகலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

    கிழக்கில் ஐ.ம.சு கூட்டமைப்பு ஆட்சி பீடம் ஏறுவதற்கு காலாக அமைந்த குறிந்த ஒரு கட்சியில் அங்கம் வகிக்கும் 03 உறுப்பினர்கள் எதிர்தரப்புக்கு பாய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த மாற்றம் நிகழ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த 03 உறுப்பினர்களும் ஐ.தே.கவுக்கே தாவ உள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

    இந்தப் பெல்டிக்கு பரிசுகளும் உண்டாம். மூவருக்கும் வழங்கும் பேரப்பேச்சுக்கள்  முடிவுக்கு வந்துள்ளதாக ஐ.தே.கவின் பெரும்பான்மையின கிழக்கு பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேற்படி மூன்று மாகாண சபை உறுப்பினர்களில் மூவருவரும்; அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்தவர்களாகும்.
    இவர்கள் ஐ.தே.கவுக்கு பெல்டி அடிக்கும் பட்சத்தில் கிழக்கில் ஆட்சியை மாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளது.

    அதே வேளை, அம்பாறை மாவட்டத்திலிருந்து பெல்டி அடிக்கும் மூவரில் ஒருவருக்கு –  கிழக்கு மாகாண சபை  சுகாதார அமைச்சும் அடுத்தவருக்கு மாகாண சபை தவிசாளர் பதவியும் இவர்களை கொண்டு சேர்ப்பதில் ஐ.தே.கவுடன் பேச்சு நடத்தும் ரவூப் ஹக்கீமுக்கு மிகவும் நம்பிக்கைக் குரியவராக இது வரை செயற்படும் – தேசிய அரசியலில் செல்ல தற்போது துடியாய் துடிக்கும் பல கட்சிகள் மாறி அண்மையில் முகா வில் இணைந்து கொண்ட மூன்றாவது  மாகாண சபை உறுப்பினருக்கு ஐ.தே.கட்சி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கவும்  இணக்கம் காணப்பட்டுள்ளது.

    ரவூப் ஹக்கீம் – எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரவு வழங்க முடிவு எடுப்பாராயின் குறித்த அண்மையில் முகாவில் இணைந்தவரின் ஐ.தே.க வழங்கவுள்ள தேசியப்பட்டியல் மேலும் உறுதி செய்யப்படுவதுடன் இதனை காராணமாக வைத்து அவர் ஐ.தே. கவில் இணைவார் எனவும் நம்பப்படுகின்றது. 

    பெல்டி அடிக்கும் மூவருக்குமான நன்றிக் கடனை  அம்பாரையில் உள்ள  ஐ.தே.கவின் முக்கிய புள்ளியிடம் அரசியல் வாதி பொறுப்பெடுத்துள்ளார்  என்பது மேலதிக தகவல்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கில் விரைவில் ஆட்சி மாற்றம்? 3 பேர் பெல்டி அடிக்க உள்ளார்களாம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top