முஸ்லீம் பெண்கள் அணியும் முகத்தை மூடும் வகையிலான நிகாப் மீது
அவுஸ்திரேலியா பாராளுமன்றம் தடை விதித்திருந்தது. பொது மக்களின்
கண்டனங்களை அடுத்து நிகாப் மீதான தடையை அவுஸ்திரேலியா அரசாங்கம்
நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தடை நீக்கம் எதிர்க்கட்சி மற்றும் மனித உரிமைகள் அமைப்பின்
பரந்த அளவிளான வரவேற்பைப் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்புக்க்கு அச்சுறுத்தல் என்பதை காரணம் காட்டி இந்த மாத
தொடக்கத்தில் புர்கா/ நிகாப் மீதான தடையை அவுஸ்திரேலியா பாராளுமன்றம்
அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. (ம-மு)

0 comments:
Post a Comment