மாத்தறை,
இஸ்ஸதீன் நகர் மஸ்ஜித்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபையினால்
உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மஸ்ஜித் அதிகாரபூர்வமாக பதிவு
செய்யப்பட்டுள்ள மஸ்ஜித் என நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கட்டிடத்தை அகற்றுமாறு ‘உத்தரவிடும்
கடிதம்’ 02.10.2014ஆம் திகதியிடப்பட்டு வக்பு சபையில் பள்ளிவாசல்
பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்தக்
கடிதத்தில் பள்ளிவாசலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பள்ளிவாசல்
பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு பள்ளிவாசலின் தலைவரின் பெயர்
குறிப்பிடப்பட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.