நீங்கள்
சரியாகத் தூங்காமல் வேலை செய்பவரா? உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. உங்களுடைய
தூக்கமின்மை உங்களுடைய மூளையை சுருங்கச் செய்யலாம் என்கின்றது ஒரு புதிய
ஆய்வு.
நேற்று வெளியிடப்பட்ட நரம்பியல் பத்திரிக்கையின் இணையப்
பதிப்பில், இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் 20 முதல் 84 வயது வரை உள்ள 147 மனிதர்களின்
மூளையை எம்.ஆர்.ஐ (MRI) ஆய்வின் மூலம் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனை
செய்து பார்த்தனர். இந்த ஆய்வின்
போது, இதில் 35 சதவிகிதம் பேர்
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு, மூளையின் முக்கிய பகுதிகளின் செயல்பாடு
குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதிலும் முக்கியமாக, 65 வயதுக்கு மேல்
உள்ளவர்களிடம் இந்த பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆனால்
தூக்கமின்மையும், சரியாக தூங்காமல் இருப்பதும் மூளையைச் சுருக்கவதாக
உறுதியாகத் தெரியவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு
ஆசிரியர் க்லெய்ர் ஈ செக்ஸ்டன், இது குறித்துக் கூறும்போது, இது அப்படியே
தலைகீழாகவும் இருக்கலாம் என்கின்றார்.
இது குறித்து செக்ஸ்டன்
அவர்கள் எழுதிய மின்னஞ்சலில், “மூளை அதிக அளவில் சுருங்கி,
பாதிக்கப்படுவதாலும் தூக்கமின்மை ஏற்படலாம் என்கிறார் அவர். இதற்கு முந்தைய
ஆய்வுகளில், சோம்பேறித்தனம், உடலின் மந்தநிலை, அதிக இரத்த அழுத்தம்,
இரத்தக் கொழுப்பு ஆகிய அனைத்தும் மூளையை பாதிப்பதாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் தூக்கமும் ஒரு முக்கியமான காரணம் என்று தெரியவந்துள்ளது.
தூக்கமின்மையை போக்க நிறைய சிகிச்சைமுறைகள் இருப்பதால், இவற்றைப்
பயன்படுத்தி மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்” என்கின்றார்.
இதற்கு
முன், தூக்கமின்மையால் ஞாபகமறதி, நோய் எதிர்ப்புக் குறைவு உள்ளிட்ட
பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது தெரிந்ததே. அதனால் இந்தக் கண்டுபிடிப்பு
அதிர்ச்சியான ஒன்றல்ல. ஆனால் இதற்காக சரியான தூக்கம் இல்லாதவர்கள், பெரிதாக
பயப்படத் தேவை இல்லை. இது வெறும் தற்செயலான ஒற்றுமையாகக் கூட இருக்கலாம்
என்கின்றார் இவர். இனி வரும் ஆய்வரிக்கைகளே இதை உறுதி செய்யும். ஆனால் எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும்.. வருமுன் காப்பதே நல்லதே..
0 comments:
Post a Comment