ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஹெல உறுமய கட்சி நேசிப்பதாக அதன் முக்கியஸ்தரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றைய மவ்பிம பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கொப்ப தேர்தல் நேரத்தில் தான் எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதன் காரணமாகவே நாங்களும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை நேசிப்பவர்கள். இந்த அரசாங்கம் தொடர்ந்திருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம்.
எனினும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில்தான் நாங்கள் தைரியமாக அரசாங்கத்துடன் இணைந்திருக்க முடியும். அதே நேரம் அரசாங்கத்தை விட்டு விலகும் எண்ணம் எங்கள் கட்சிக்கு இல்லை. மக்கள் எங்களை அரசியல் நடிகர்கள் என்று முத்திரை குத்திவிடக் கூடாது. அவ்வாறு நாங்களும் எங்கள் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள மாட்டோம் என்றும் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.இதனைத் தெரிவித்துள்ளார்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கொப்ப தேர்தல் நேரத்தில் தான் எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதன் காரணமாகவே நாங்களும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை நேசிப்பவர்கள். இந்த அரசாங்கம் தொடர்ந்திருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம்.

0 comments:
Post a Comment