நிந்தவூரின் பிரதான வீதியின் இரு மருங்கிலும் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் இணைப்புச் செய்யப்பட்டு செல்லவுள்ளன.
ஏற்கனவே மேற்கு பக்கம் இலங்கை மின்சார சபையின் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் இணைப்புச் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, பிராதன வீதியின் கிழக்கு பக்கம் தனியாருக்கு சொந்தமான அதிசக்தி
வாய்ந்த மின்சாரக் கம்பிகள் இணைப்புச் செய்வதற்காக கொங்றீட் கட்டைகள்
நடப்பட்டுள்ளன. அத்தோடு, கிழக்கு பக்கம் உள்ள மரங்கள் பலவும்
வெட்டப்பட்டுள்ளன.
இரண்டு பக்கமும் அதிசக்தி வாய்ந்த மின்சாரக் கம்பிகள் செல்லுவதனால் நிழலுக்கு மரங்களை நாட்டுவது கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மஹிந்த சிந்தனையின் கீழ் நடப்பட்டுள்ள மரங்களும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளன.
இம்மரங்கள் வளராது இருந்தால் அவற்றிக்கு பாதுகாப்பு. வளர்ந்தால் வெட்டியே தீர்வார்கள். (நிந்தவூரின் சில இடங்களில் இலங்கை மின்சார சபையின் அதிசக்தி வாய்ந்த கம்பிகள் கிழக்கு பக்கத்தில் உள்ளது.)
0 comments:
Post a Comment