• Latest News

    October 22, 2014

    சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டும்!- ஞானசார தேரர்

    முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டுமென பொதுபல பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

    கிருலப்பனை போதி தர்ம மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து இல்லாமல் போனதற்கு சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பே காரணமாகும்.
    கட்சித் தாவலை நியாயப்படுத்தி சரத் என் சில்வா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் இன்று வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்திருக்கும். இவ்வாறான ஓர் நபர் 19ம் திருத்தச் சட்டத்தை உருவாக்குவது எந்தளிற்கு நியாயமானது.

    அவ்வாறு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் தார்மீக பொறுப்பும் சரத் என் சில்வாவிற்கு கிடையாது. தூய்மையான நாளை என்ற அமைப்புடன் எந்த தொடர்பும் கிடையாது.

    திடீரென தூக்கத்தில் எழுந்ததனைப் போன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரத்ன தேரர் செயற்பட்டு வருகின்றார். எவ்வாறெனினும் ஜாதிக ஹெல உறுமயவும் தமது கட்சியும் ஒரே விதமான கொள்கைகளை பின்பற்றுகின்றன.

    நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் வறையறுக்கப்பட வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரையில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டும்!- ஞானசார தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top