எம்.வை.அமீர்: கல்முனை மாநகரசபையின் தென் எல்லையான
சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லையில் பலவருடங்களுக்கு முன்னர் கல்முனை
அபிவிருத்திக் குழுவின் தலைவருரும் திகாமடுல்ல மாவட்ட பாராளமன்ற உறுப்பினருமான
எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளின் கீழ் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமுடைய நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த வரவேற்பு வளைவில்
பொறிக்கப்படவேண்டிய வாசகம் தொடர்பில் சில இழுபறி நிலை காணப்பட்டதால் அந்த வரவேற்பு
வளைவை புனரமைப்பு செய்யப்படாது இருந்தது.
தற்போது கல்முனை மாநகர முதல்வர் நிஸாம்
காரியப்பரது தலைமையில் உள்ள சபையில், அச்சபையின் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் முன்வைத்த
பிரரணையின் கீழ் கல்முனை மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் தற்போது புனரமைப்பு
செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வளைவில் “கல்முனை மாநகரசபை
வரவேற்கிறது ,சாய்ந்தமருது
” என்ற வாசகம் பொறிக்கப்படவுள்ளதகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
இதேவேளை குறித்த வரவேற்பு வளைவு எதிர்வரும் 23
ம்
திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த
தினத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைக்கும் வேளையில் திறந்து
வைக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் எமது செய்திச்சேவைக்கு
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment