அகமட் எஸ். முகைடீன்: சம்மாந்துறைக் கல்வி
வலயத்தில் அமைந்துள்ள கஷ்டப் பிரதேச பாடசபலையான மலையடிக்கிராம கமு/சது/அல்-ஜெனீஸ்
வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முஹம்மது காசிம் ஹிக்மா, 2014ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்
பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
குறித்த பாடசாலை
1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மீராலெப்பை நபீலா உம்மா இப்பாடசாலையின் அதிபராக
கடந்த 2012.11.21ஆந்திகதி பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து மேற்படி அதிபரின்
வழிகாட்டலில் தரம் ஐந்து ஆசிரியர் ஏ.எஸ்.எம்.பஸ்மியாவின் முயற்சியினால் 2014ஆம்
ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு 07 மாணவர்கள் தோற்றி பாடசாலை
வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாணவர் சிந்தியடைந்திருப்பது இப்பாடசாலைக்கு
பெருமைசேர்க்கின்றது.
வளப்பற்றாக்குறையோடு
காணப்படுகின்ற இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் மாணவர்களின்
கல்வியில் கனிசமான வளர்ச்சி கண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஐந்தாம் ஆண்டு
புலமைப் பரிசில் பரீட்சை 2014ல் தோற்றிய ஏனைய குறித்த பாடசாலை மாணவர்களின்
புள்ளிகளாக எம்.ஏ.ஹாலிதா பானு - 157, எப்.எப்.ஹஸ்னா - 156, ஏ.எஸ்.எம்.ஆஸிம் - 138,
எம்.டி.எப்.மபாதா - 99, ஜெ.எப்.நுஹா - 70, என்.எம்.அஸ்ரிப் - 66 ஆக காணப்படுகிறது.



0 comments:
Post a Comment