• Latest News

    October 02, 2014

    நிந்தவூரில் பாவப்பட்ட அபிவிருத்தி!

    சஹாப்தீன்:
    நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் இன்றைய அவல நிலையையே படங்களில் காண்கின்றீர்கள். பார்ப்பதற்கு குளம் போல் காட்சியளிக்கும் இவ்வீதியின் அவலம் இவ்வூர் அரசியல்வாதிகளுக்கு அழகு போல் தென்படுகின்றது?

    இவ்வீதியில் பெரிய பள்ளிவாசல், மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை, காஷிபுல் உலூம் அரபிக் கல்லூரி, மாவட்ட வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை, பொதுச் சுகாதார காரியாலயம் என முக்கிய நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும், வைத்தியசாலை வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாதிருப்பது விசனத்திற்குரியதாகும்.

    தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளது. இதனால், குறிப்பிட்ட வைத்தியசாலை வீதி, இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஆறு போன்றே காட்சியளிக்கப் போகின்றது. இதனால், பொது மக்கள் இன்று அனுபவிக்கின்ற அசௌகரியங்களின் அளவு அதிகமாகவே இருக்கும்.

    நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை வீதி, நிந்தவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாவப்பட்டதொரு அபிவிருத்தியில் ஒன்றாகும். இது போன்று நிந்தவூரில் பல அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்;கப்பட்டன. ஆனால், இன்று வரை ஆரம்பிக்கப்பட்டதே முடிவாகவும் இருக்கின்றது. அவைகள் பற்றி படிப்படியாக நாம் முன் வைப்போம்.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் பாவப்பட்ட அபிவிருத்தி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top