அபூ இன்ஷப்:
சர்வதேச சிறுவர் தினத்தையிட்டு சம்மாந்துறைக் கல்வி வலயம் ஏற்பாடு செய்த ஊர்வலமும் சிறுவர் தின நிகழ்வுகளும் நேற்று (01) சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் தலைமையில் நடை பெற்ற இந்த வைபவத்தில் கிழக்குமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமுக சேவைகள் மகளிர் அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5ம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவன் ஸபீர் முஹம்மட் நிகாஷ; ஸஹான் என்பவர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார் அத்துடன் சிரேஷ;ட பிரஜையாக தெரிவு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற அதிபர் கலாபூசணம் மாறன் யூ.செயின் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment