| அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 356 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி, யூனிஸ்கான் (இரட்டைசதம்), மிஸ்பா உல் ஹக் மற்றும் அசார் அலி ஆகியோரின் சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 570 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 261 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆகி பாலோ-ஆன் ஆனது.
பாகிஸ்தான் பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அசார் அலி சதமும், மிஸ்பா உல் ஹக் அதிவேக சதமும் அடித்தனர். 293 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்தது.
இதனால் அவுஸ்திரேலியாவிற்கு 603 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 356 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மிஸ்பாவும், தொடர் நாயகனாக யூனிஸ்கானும் தெரிவு செய்யப்பட்டனர். |
November 04, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment