யு.எல்.எம்.றியாஸ்:சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சவளக்கடை வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் ” அல் ஹிதாயாவின் வசந்தம் ( றபீயுல் ஹிதாயா – 2014 ) நாற்பெருவிழா நிகழ்வுகள் வித்தியாலய வளாகத்தில் பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஸி.பைஸல் காசிம் பிரதம அதிதியாகவும் , சம்மாந்துறை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் கௌரவ அதிதியாகவும் , நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ரஜாப்தீன் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன் , சவளக்கடை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.ரத்நாயக , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி.எம்.நிஸார் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.ஏ,அஸீஸ் , சவளக்கடை அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய அதிபர் எம்.யுசுப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிமின் 1.3 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ள பாடசாலையின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடுதல் , உலக ஆசிரியர் தினத்தையொட்டிய தரம் 9 மாணவர்களினால் எழுதப்பட்ட ” ஊற்று ”
சஞ்சிகை வெளியிட்டு வைத்தல் , 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற எம்.எஸ்.எப்.ஹஸ்னா ,எம்.என்.சிஹ்னாஸ் ஆகிய மாணவர்களை பாராட்டுதல் , பாடசாலை ஆசிரியர்களை பாராட்டி கௌரவித்தல் ஆகிய நாற்பெருநிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிமின் சேவையை பாராட்டி பாடசாலை சமூகம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இவ் விழாவின் போது இடம்பெற்றன.
ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் ,பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை முஹம்மட் மக்புல் அழகாக தொகுத்து வழங்கினார்.

0 comments:
Post a Comment