சஹீத் அஹமட் :கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலய மாணவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றபோது புராதன சின்னங்களை மையினால்
எழுதியதற்காக தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலய
மாணவியொருவர் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
புராதன சின்னங்களை மையினால் எழுதுவதோ அல்லது சேதப்படுத்துவதோ தொல்பொருள்
சட்டத்தின்படி குற்றமாகும்.
இந்த நிலையில் குறித்த மாணவி, புராதன
சின்னங்களை மையினால் எழுதியதாக சீகிரியா பொலிஸாரினால் குற்றப்பத்திரம்
தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தங்களோடு சுற்றுலா வந்த மாணவியை
விடுவித்தால் மாத்திரம்தான் பொலிஸ் நிலையத்தைவிட்டு நகருவோம் என்று
மாணவிகள் பொலிஸ் நிலையம் முன்பாக போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற
உறுப்பினர்கள் ,அமைச்சர்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து
செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சீகிரியா பொலிஸ் நிலையத்துடன்
தொடர்பு கொண்டுள்ளார் . எனினும் குறித்த மாணவியை தங்களால் விடுவிக்க
முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனால் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
மற்றும் சீகிரிய பிரதேச அரசியல் பிரமுகரும், காணி அமைச்சருமான ஜனக்க பண்டார
தென்னக்கோன் ஆகியோரின் கவனத்திற்குக் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்
கொண்டுசென்றார். இவர்கள் இருவரும் மாணவியை விடுவிப்பதற்கு பல முயற்சிகளை
எடுத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது . எனினும் மாணவியை விடுவிப்பதில்
சிக்கல்கள் ஏற்பட்டபோது மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரியவின்
கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது
இதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பஷில் ராஜபக்ஸவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது இதனையடுத்து
பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று
சீகிரியாவுக்கு அனுப்புவதற்கு அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஏற்பாடுகளைச்
செய்துள்ளார்
சீகிரியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற உயர்
பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் கலந்துரையாடி
மாணவியை விடுவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புராதன சின்னங்களை
சேதப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது பெரிய குற்றமாகும் அதேவேளை
அதிகாரிகள் சேதப்படுத்துக் கூடிய வகையில் புராதன சின்னங்களை பாதுகாப்பற்ற
முறையில் வைத்திருப்பதும் , பார்வையாளர்களுக்கு புராதன சின்னங்களின்
பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தல்களை சிங்கள மொழியில் மட்டும் வழங்குவதும்
பெரிய குற்றமாகும் .
நாட்டின் காணப்படும் சில புராதன சின்னங்கள்
உள்ள இடங்களுக்கு அவற்றை பார்வையிடச் செல்லும் முஸ்லிம் மாணவியர்
ஹிஜாபுடன் செல்லக் கூடாது என அதிகாரிகளினால் அறிவுறுத்தப்படுவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் திரும்பி
சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 comments:
Post a Comment