பாராளுமன்றத்தில்
2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5
மணிக்கு நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு தரப்பிலும் கட்சிமாறல் சம்பவங்கள்
இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலவேளைகளில் வரவு செலவுத் திட்டம்
தோற்கடிக்கப்படுமானால் பாராளுமன்றம் கலைக்கப் பட்டு பாராளுமன்ற
தேரதளுக்கு அழைப்பு விடுக்கபடவேண்டும் என்பது சட்டமாகும், எனினும்
மக்களுக்கு சலுகைகளை வழங்கும் இந்த வரவு செலவுத் திட்டம்
தோற்கடிக்கப்படவாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வரவு செலவுத் திட்ட கடைசி
நாளில் பலர் தம்பக்கம் வருவர் என்று தெரிவித்திருந்தார்.என்பது
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment