அபூ-இன்ஷப்: சம்மாந்துறை நவாஸ் எஞ்சினியர் பௌண்டேஷன் நிறுவனத்தினால் பொறியியல் துறையில் உயர் கல்வியினை தொடரும் 200 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், பொறியியல்துறையில் பிரித்தானிய சிற்றி அன் கில்ட்ஸ் நிறுவனத்தினால் பயிற்சியினை முடித்துக் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று (23) ஞாயிற்றுக் கிழமை மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடை பெற்றது.
மோனராகலை மாவட்ட தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பொறியியலாளர் சப்ரி தலைமையில் நடை பெற்ற இந்த வைபவத்தில் பிரதம அதீதியாக சம்மாந்துறை நவாஸ் எஞ்சினியர் பௌண்டேஷன் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும், சம்மாந்துறை கொலேஜ் ஒப் மொடன் டெக்னொலோஜி (ஊழடடநபந ழக ஆழனநசn வுநஉhழெடழபல) நிறுவனத்தின் முகாமைத்தவ பணிப்பாளரும், மோனராகலை மாவட்ட நீர்பாசன பொறியியலாளருமான சமூக சேவையாளர் லயன் எம்.எஸ்.எம்.நவாஸ் கலந்த கொண்டார்.
சம்மாந்துறை கோல்டன் சிற்றி லயன்ஸ் கழகம் அனுசரனையாளர்களாக கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி பொறியியலாளர் நவாஸ் உரையாற்றுகையில் பாடசாலைக் கல்வியினை முடித்துக் கொண்டு உயர்கல்வியினை தொடருகின்ற மாணவர்களுக்கு வறுமை என்பது தடையாக இருந்து விடக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டும் என்னுடை பொறியியல்துறை கற்கின்ற காலத்திலும் அதன் பின்னர் என்னால் நிர்வாகிக்கப்படுகின்ற நிறுவனத்தை இயக்கி வருகின்ற போது ஏற்றபட்ட அனுபவங்களைக் கொண்டுமே இதனை நான் ஆரம்பித்துள்ளேன்.
என்னுடைய பொறியியல் துறையில் வரலாற்றில் 5000 மாணவர்களுக்கு கற்பித்த ஒரு ஆசிரியர் என்று செல்லிக் கொள்ள பெருமைப்படுகின்றேன். தான் கற்ற கல்வியினை தன்னோடு மாத்திரம் வைத்துக் கொள்ளது அதனை பிறருக்கும் பிரயோசனப்படுத்தக் கூடிய வகையில் எனக்கு வாய்பளித்த அறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன். அவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் உள்ளுர்களிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரிந்து வருகின்றனர்.
எனவே தான் உயர் கல்வியினை தொடருகின்ற மாணவர்கள் உங்களது கற்கைகளை எதிகால தேவையினையும், அதனுடாக தங்களது வாழ்கைத்தரத்தை உயர்த்தக் கூடிய வகையிலும் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்று பாருங்கள் பல்கலைக் கழகங்களிலே பட்டத்தை முடித்து விட்டு பலவரடங்கள் காத்திருந்த நிலையில் தாம் கற்ற கல்விக்க தொடர்பற்ற விதத்தில் பிரதேச செயலகங்கள் போன்ற நிறுவனங்களில் பத்தாயிரம் ரூபாவுக்கு தெழில்புரிய வேண்டிய துற்பாக்கிய நிலை தொன்றியுள்ளது.
தொழில் நுட்பத்தறையில் நமது அறிவை பயன்படுத்திக் கொள்வதனுடாக அதனூடான கற்கை நெறிகளை பயின்று சான்றிதழ் பெற்றுக் கொண்ட மறுநாளே தொழில்களை பெற்றுக் கொள்வதுடன் போதியளவான வேதனத்தையும் பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை கோல்டன் சிற்றி லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எம்.ஐ.ஏ.ஜலில்,மாவட்ட லயன் ஆளுனர் சபையின் ஆலேசகர் லயன் எஸ.எம்.இப்றாலெப்பை, இறக்காமம் பிரதேச செயலாளர் லயன் எம்.எம்.நஸீர், சிரேஷ;ட சட்டத்தரணிகளான லயன் ஏ.ஹஜ்ஜூல் அறூஸ், லயன் அன்வர்சியாத், லயன் டாக்டர் எம்.எம்.எம்.சாஹிர். கணக்காளர் லயன் எஸ்.ரீ.ஜிப்ரி உட்பட பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்hகள் .கலவி மானகள் பலரம் கலந்து கொண்டனர்.
பொறியியல் கற்கைக்காக விண்ணப்பித்த 500 விண்ணப்பங்களிலிருந்து புலமைப்பரிசில் கற்கைக்காக 200 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தலா ஒருவருக்கு 30000.00 விதம் மொத்தமாக 06மில்லியன் ரூபா வழங்க படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







0 comments:
Post a Comment