• Latest News

    November 27, 2014

    நிந்தவூர் பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறியது

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்தின் கீழ் உள்ள நிந்தவூர் பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் இன்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இன்று காலை 10 மணியளவில் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில், பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் 2015ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார். 
    அவர் தனது உரையின் போது,
    தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்

    இந்த வரவு-செலவு திட்டமானது, எமது நிந்தவூர் பிரதேச மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நமது பிரதே சபையின் மூலமாக மக்களுக்குரிய சேவைகள் ஏதாவது ஒரு அடிப்படையில் சென்றடைய வேண்டும். இதனை கருத்திற் கொண்டுதான் நாம் எல்லோரும் இங்கு வந்துள்ளோம்.

    அந்த வகையில் நிந்தவூர் பிரதேச சபை தனது இயலுமைக்கு உட்பட்ட வகையில் பல அபிவிருத்திப் பணிகளை செய்து கொண்டு வந்துள்ளது. இதே போன்று 2015ஆம் ஆண்டிலும் மக்களுக்கு முடியுமான சேவைகளை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஆதலால், மக்களின் நலநன அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ்வரவு-செலவு திட்டமானது மீண்டுவரும் வருமானமாக பொது நிர்வாகம் மூலமாக ரூபா 55,112,839.58 மூலதன வருமானமாக ரூபா 20,800,000.00 என மொத்தமாக ரூபா 75,912,839.58ஐ எதிர் பார்க்கின்றோம். இந்த வருமானத்தைக் கொண்டு மீண்டுவரும் செலவீனமாக ரூபா 46,212,500.00, மூலதனச் செலவீனம் ரூபா 29,050,000.00, கொடுப்பனவு ரூபா 650,000.00 ஆக அமைந்துள்ளது.

    இந்த வரவு-செலவு திட்டத்தின் மூலமாக நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடைந்து கொள்வதற்கு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனக் கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து, வரவு-செலவு திட்டம் பற்றி பிரதேச சபையின் உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இறுதியில் 2015ஆம் ஆண்டிற்கான நிந்தவூர் பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறியது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top