• Latest News

    November 18, 2014

    மஹிந்த சிந்தனையில் 'செழிப்பான இல்லம்' என்ற தொனிப் பொருளில் திவிநெகும குடும்பங்களுக்கு 2500 ரூபா

    பி.எம்.எம்.ஏ.காதர்: கல்முனை பிரதேச செயலகப்பிரில் உள்ள 6084 திவிநெகும குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா இன்று (18-11-2014) வழங்கப்படவுள்ளது.   மஹிந்த சிந்தனையில் 'செழிப்பான இல்லம்'  என்ற தொனிப் பொருளில் வீடுகளில் உள்ள சிறிய குறைபாடுகளைத் திருத்தவதற்கு முதல் கட்டமாக இந்த நிதி வழங்கப்படுகின்றது.

    கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நற்பிட்டிமுனை,மருதமுனை,கல்முனைக்குடி ஆகிய கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கல்முனை பிரதேச அபிவிருத்திக்  குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு இந்த நிதியை வழங்கவுள்ளார்.

    விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.மங்கள விக்கிரம ஆராச்சி, கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளர்  ஐ.அலியார், மற்றும் அதிதிகளாக திவிநெகும உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

    மருதமுனை,நற்பிட்டிமுனை திவிநெகும வங்கி ஊடாக 3068 குடும்பங்களும், கல்முனைக்குடி  திவிநெகும வங்கி ஊடாக 3016 குடும்பங்களுமாக 6084 குடும்பங்கள் இந்த நிதியைப் பெறவுள்ளனர். இதற்காக 151இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக  கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்த சிந்தனையில் 'செழிப்பான இல்லம்' என்ற தொனிப் பொருளில் திவிநெகும குடும்பங்களுக்கு 2500 ரூபா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top