• Latest News

    November 09, 2014

    ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 2 - பொதுவேட்பாளர்- சந்திரிகாவா? ரணிலா? தொடரும் கேள்விகள்

    இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் 2015ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ெபரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் பயணத்துக்கு வழிசமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாப்பரசர் ஜனவரி 13ம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

    எனவே தேர்தல் ஒன்றின் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் போது பாப்பரசரின் விஜயம் சாத்தியமாகாது என்ற அடிப்படையிலேயே இந்த திகதி முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ராசியான நாளாக கருதப்பட்ட ஜனவரி 8ம் திகதியே ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.

    அதுவும் ஜனவரி 23ம் திகதி வரை ஜனாதிபதிக்கு ராசியான நாட்கள் என்று சோதிடர்கள் கூறியதன் பின்னர் அந்த திகதி ஆலோசிக்கப்பட்டது.

    எனினும் பாப்பரசரின் விஜயத்தை குழப்பிவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு ஜனவரி 2ம் திகதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

    இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவா? என்ற வாத விவாதம் இன்னும் தொடர்கிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 2 - பொதுவேட்பாளர்- சந்திரிகாவா? ரணிலா? தொடரும் கேள்விகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top