ஐக்கிய
மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு
செலவுத் திட்டம் பாராளுமன்றில் மேலதிக 95 வாக்குகளால்
நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152
வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐதேக,
ததேகூ, ஜேவிபி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம்
கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன.
பொது வேட்பாளருடன் அரசாங்கத்தில் இருந்து
வெளியேறிய எவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி வரவு செலவுத்
திட்டம் மேலதிக 95 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment