ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைத் தவிர்ந்த வேறு எவருக்கேனும் வாக்களிக்க முடியும். நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடிகள் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றது. மஹிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
என ஜே.வி.பி கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றியுள்ள அவர் , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி தேர்தல நடத்துவது குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்ட சம்பிரதாயங்களை புறந்தள்ளி ஜனாதிபதி மஹிந்த நீதிமன்றக் கட்டமைப்பை கட்டுப்படுத்தியுள்ளார்.ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது. அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியினால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.
இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது. எனினும் மிகவும் தந்திரமான முறையில் ஜனாதிபதி மஹிந்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோரி பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகம் சுதந்திரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment