• Latest News

    November 06, 2014

    ஆத்ம கௌரவம் இருப்பதால் அரசாங்கத்தில் தொடர்ந்திருக்க போவதில்லை: உதய கம்மன்பில

    ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள திருத்தங்கள் செயற்படுத்தப்படும் நிலைக்கு வரவில்லை என்றால், தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை என அந்த கட்சியின் செயலாளரான மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் நேற்று நடைபெற்ற அரசியல் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    மன்னனின் வாளால் வெட்டுப்படுவோம் என்ற பயம் இருந்தாலும் அரசியல் ரீதியான ஆபத்தை கவனத்தில் கொள்ளாது நாங்கள் எமது யோசனைகளை மக்கள் மத்திக்கு கொண்டு சென்றுள்ளோம்.

    இதனால், ஆத்ம கௌரவம் இருக்கும் அரசியல் அமைப்பு என்ற வகையில், எமது யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை என்றால், நாங்கள் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

    சுமார் 5 வருடங்களாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் நிலையில், ஜனாதிபதியின் தேவைகளை நிறைவேற்ற இந்த பலம் பயன்படுத்தப்பட்டதே அன்றி நாட்டின் தேவைக்காக பயன்படுத்தப்படவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆத்ம கௌரவம் இருப்பதால் அரசாங்கத்தில் தொடர்ந்திருக்க போவதில்லை: உதய கம்மன்பில Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top