• Latest News

    November 21, 2014

    ராஜபக்ஷவினர் எங்களையும் அவர்களை போல் எண்ணி விட்டனர்: ரஜீவ விஜேசிங்க

    அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோரின் வித்தியாசங்கள் பற்றி ராஜபக்ஷவினருக்கு தெரியாது என ஆளும் கட்சியில் இருந்து விலகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

    கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரஜீவ விஜேசிங்கவுக்கு உத்தியோகபூர்வ வாகனத்தை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குறுஞ் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், எமக்கும் ராஜபக்ஷவினருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    தம்மை போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று கணித்து ஏனையோரும் திருடர்கள், மோசடியாளர்கள் என நினைத்தன் காரணமாக நாட்டை இன்று பெரும் அனர்தத்திற்குள் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

    அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட சகலவற்றையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜபக்ஷவினர் எங்களையும் அவர்களை போல் எண்ணி விட்டனர்: ரஜீவ விஜேசிங்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top