தென்னாபிரிக்க
அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ்
முறையில் 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் போட்டி
தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அம்லா 18 ஓட்டங்களுடன் மெக்ஸ்வெல் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றைய தொடக்க வீரர் டி கொக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் வந்த பெகார்டியன் 63, ரஷ்சவ் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தென்னாபிரிக்க அணி 50 ஓவர் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது.
280 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 66 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இந்நிலையில் தமதமாக போட்டி ஆரம்பமாகிய போது டக்வேர்த் லூயிஸ் விதிப்படி அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
பின்ஞ் 76, வொட்சன் 82, ஸ்மித் 67 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க அவுஸ்திரேலிய அணி 47.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலாமிடத்தை மீண்டும் பெற்றுக்கொண்டது.

0 comments:
Post a Comment