• Latest News

    November 24, 2014

    கல்முனை மாநகர சபை மேயரை விசாரணைக்கு வருமாறு ஹக்கிம் அழைப்பு

    இணையதளமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் பற்றி உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதில் மேயர் நிஸாம் காரியப்பரின் ஊடகச் செயலாளர் தொடர்பு கொண்டிருப்பதன் காரணமாகவே மேயர் நிஸாம காரியப்பர் விசாரணைக்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், மேயர் நிஸாம் காரியப்பரின் ஊடகச் செயலாளரும் ஹக்கிமினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடலின்  போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமிடம் குறிப்பிட்ட இணையத்தளம் அடிக்கடி என்னைப் பற்றி பிழையான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றது. இந்த இணையத்தளத்தின் ஆசிரியராக மேயர் நிஸாம் காரியப்பரின் ஊடகச் செயலாளர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார் என முன் வைத்த முறைப்பாட்டினையடுத்தே ஹக்கிம் விசாரணைக்கான அழைப்பை விடுத்துள்ளார்.

    இதேவேளை, குறிப்பிட்ட இணையத்தளத்தின் ஆசிரியரை செய்தி ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபை மேயரை விசாரணைக்கு வருமாறு ஹக்கிம் அழைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top