• Latest News

    November 19, 2014

    ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று ? நாகவிகாரையில் கூடியுள்ளன எதிர்கட்சிகள் கட்சிகள்

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு இன்று விடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள்தெரிவிக்கின்றன.

    2005 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  தனது 6 வருட பதவி காலம் முடிவதற்கு முன்னரே 2009 நவம்பர் 23 ஆம்  திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 2010 ஜனவரி 26 ஆம்  திகதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் மஹிந்த  வெற்றிபெற்றார்.

    எனினும் 2010 நவம்பர் 19ஆம்  திகதியே ஜனாதிபதி இரண்டாவது முறைக்காக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் இரண்டாவது முறை பதவி காலம் நிறைவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி மீண்டும் ஒரு தேர்தல் அறிவிப்பை விடுக்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இன்று நள்ளிரவு ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  வர்த்தமானி மூலம் அறிவிப்பார் என தெரியவந்துள்ளது.

    சோபித தேரர் தலைமையில் நாகவிகாரையில் கூடியுள்ளன கட்சிகள்

    பொது எதிரணி கட்சிகளின் கூட்டம் சோபித தேரரின் தலைமையில் நாகவிகாரையில் தற்போது நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க,மனோ கணேஷன்,அசாத் சாலி என் பல கட்சித் தலைவர்கள் கலந்தது கொண்டுள்ளனர்.

    மேலும் இக்கூட்டத்தில் சந்திரிகா அனுப்பி வைத்துள்ள கடிதம் வாசிக்கப்பட்டுள்ளதகாவும்,இக்கூட்டத்தின் முடிவில் பொது வேட்பாளர் தொடர்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும்தெரியவருகிறது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று ? நாகவிகாரையில் கூடியுள்ளன எதிர்கட்சிகள் கட்சிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top