ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பலத்தை எந்த வகையிலும் குறைக்காது. அது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் .
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பீரிஸிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது ஒரு கூட்டரசாங்கம். இந்நிலையில் கூட்டு அரசாங்கம் ஒன்றில் பல கட்சிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு பல கட்சிகளிடம் தமக்கென நிலைப்பாடுகள் இருக்கும்.
எனவே ஏதோவாரு காரணத்துக்காக கூட்டணியைவிட்டு விலகுவதற்கு கட்சிகள் தீர்மானிக்கின்றன. அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அது அவர்களின் தீர்மானம். அதனை நாம் தடுக்க முடியாது. மேலும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கைகளை நாங்கள் நிராகரிக்கவில்லை. அவர்கள் வழங்கிய 35 அம்சங்கள் முக்கியமான சில விடயங்கள் இருந்தன. அவற்றை ஆழமாக பார்க்கவேண்டும்.
இந்நிலையில் அவற்றை அவசரமாக செய்ய முடியுமா? தற்போது வரவு செலவுத்திட்ட விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. எனவே இவை ஆழமாக ஆராய்ந்து பார்க்கப்படவேண்டிய விடயங்கள்.
எவ்வாறெனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலத்தை எந்த வகையிலும் குறைக்காது. அது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜனாதிபதி மிகவும் பலம்வாய்ந்த தலைவராக இரு்க்கின்றார். ஒரு கட்சி வெளியேறுவதானது அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார் .

0 comments:
Post a Comment