• Latest News

    November 21, 2014

    ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு

    ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார்.

    இவர் தனது கட்சியை விட்டு ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சுப் பதவியொன்றுக்கும் நியமிக்கப்படவுள்ளார்.

    நேற்று மாலை பாலித ரங்கே பண்டாரவுக்கும் , அமைச்சர் பசில் ராஜபக்ஷவுககும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது 25 கோடி ரூபா கைமாறியதை அடுத்தே பாலித ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு ஐம்பது கோடி விலை பேசப்பட்ட போதிலும் அவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ள மறுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top