• Latest News

    November 17, 2014

    இனவாதம்,மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! ரணில் விக்கிரமசிங்க

    அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் ஒன்று

    கூடல் வைபவமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது. எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

    ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம்இ மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

    அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தியாக சித்தரிக்க முயன்று வருகின்றது. எனினும் இது போன்ற பிரச்சாரங்களால் எமது கட்சியின் வெற்றியை அரசாங்கத்தினால் இனி தடுத்து நிறுத்த முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இனவாதம்,மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! ரணில் விக்கிரமசிங்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top