நோர்வே அரசு மீதும் தன் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின் அரசு மீதும், சொல்ஹெய்ம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் குறித்த மறுப்பு அறிக்கையை நாளை திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ஜனாதிபதி தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாதவை.
எனினும், தேர்தல் நெருங்குவதால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னைப் பற்றி பொய் கூறியுள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை உண்மை நிலையை தெளிவுபடுத்துவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்காக என்னை பற்றி பொய் கூறுகிறார்- எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாம் நிதியுதவி செய்ததாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொய் கூறுவதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் செய்தி ஒன்றின்மூலம் இந்தக் குற்றச்சாட்டை சொல்ஹெய்ம் மறுத்துள்ளார்.
தேர்தல் ஒன்றை குறிவைத்து மஹிந்த ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
எனினும் நாளை திங்கட்கிழமை தாம் நேரடியாக உண்மையை கூறப் போவதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு நோர்வே நிதி வழங்கியமைக்கு தம்மிடம் ஆதாரம் உண்டு.
எனவே நோர்வே அரசாங்கம் இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதன்போது அவர் எரிக் சொல்ஹெய்ம்மின் மீது நேரடி குற்றச்சாட்டை சுமத்தினார்.
அவர், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு நோர்வேயின் நிதியுதவி தொடர்பில் விசாரணை வேண்டும்!- ஜனாதிபதி
விடுதலைப் புலிகளுக்கு போர்க் காலத்தின் போது நோர்வே நிதியளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த நாடு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
நோர்வே, புலிகளின் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்கியது. அதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளன என்று ஜனாதிபதி குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குற்றம் சுமத்தினார்.
அத்துடன் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு பக்கபலமாக செயற்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அந்த மனிதன், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

0 comments:
Post a Comment