• Latest News

    November 18, 2014

    இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும்: ஐ.ஈ.பி. எச்சரிக்கை

    இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் வாய்ப்பு காணப்படுவதாக பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகம் (institute for economics and peace)எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த வருடத்துக்கான உலக சமாதானச் சுட்டி அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில் இவ்வாறு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

    பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தின் இந்த அறிக்கையை நோபல் பரிசு பெற்றவர்கள், சர்வதேச தலைவர்கள் உட்பட பலர் அங்கீகரித்துள்ளனர்.

    அந்த அறிக்கையில்,

    இலங்கை உட்பட பல நாடுகளில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இலங்கை உட்பட 13 நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பயங்கரவாத நடவடிக்கைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

    அங்கோலா, பங்களாதேஷ், புருண்டி, ஈரான், மத்திய ஆபிரிக்க குடியரசு, பித்ஜண், டிதியோப்பியா, இஸ்ரேல், ஈரான், மாலி,மெக்சிகோ, மீயன்மார், இலங்கை ஆகிய 13 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    அரசியல், வன்முறை உட்பட பல சுட்டிகளை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    166 நாடுகளில் 2010 முதல் 13 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட போக்குகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.

    2013 இல் பயங்கரவாதத்தால் இடம்பெற்ற 80 வீதமான மரணங்கள் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சிரியா, ஈரான், நைஜீரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

    இந்த 5 நாடுகளுக்கு அப்பாலும் பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும்: ஐ.ஈ.பி. எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top