• Latest News

    November 18, 2014

    ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தையிட்டு பூஜை வழிபாடுகள்

    அபூ இன்ஷப்: ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தையிட்டு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டின் கீழ் பூஜை வழிபாடுகள் இன்று (18) நடைபெற்றது.

    இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதியின் 69வது பிறந்த தின நிகழ்வு அன்னமலை-02 வேம்படி செல்வ வினாயர் ஆலயத்தில் நடைபெற்றது.

    நாவிதன் வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரண் தலைமையில் நடைபெற்ற இந்த விஷேட பூஜை வழிபாடுகளை ஆலய குரு த.நேசராச நடாத்தி வைத்தார்;
    பூஜை வழிபாடுகளில் நாவிதன் வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும்  கலந்து கொண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தையிட்டு பூஜை வழிபாடுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top