ஜனாதிபதி பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவரை தேர்தல் களத்தில் நிறுத்தாமையை அவர் கண்டித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின்; செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற போது ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பிரேரித்தார்.
இதன் போது தயா கமகே எதிர்ப்பை வெளியிட்ட போதும் கட்சியின் பலரும், மஹிந்த ராஜபக்சவுக்கு மைத்திரிபாலவே போட்டியாளராக இருக்க முடியும் என்று குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment