• Latest News

    November 22, 2014

    ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்ல நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகள் இல்லை: ஹசன் அலி

    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் எந்தவிதமான ஒப்பந்தத்திலும் இதுவரை கைச்சாத்திடவில்லையென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி உறுதிபட கூறினார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
    கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் தனியாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முடியாது. ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்ல நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகள் இல்லை. முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்காகவே ரவூப் ஹக்கீம் செயலாற்றுகிறார்.
    அண்மைய தினங்களில் நானும் அமைச்சர் பிசல் ராஜபக்ஸ மற்றும் சுசில் பிரேம்ஜயந்தவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டது உண்மைதான். குறிப்பாக கல்முனை கரையோர மாவட்டம் குறித்து பேசினோம். ரணிசிங்க பிரேமதாசாவினால் ஒரே இரவில் பல்கலைக்கழ வெட்டுப்புள்ளி தொடர்பில் பிரகடனத்தை வெளியிட முடியுமென்றால், மஹிந்த ராஜபக்ஸவினாலும் கல்முனை கரையோர மாவட்டத்தை பிரகடனப்படுத்த முடியும்.


    ஜப்னா முஸ்லிம் இணையம் மூலமாகவே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என அறிந்துகொண்டேன். மஹிந்த மற்றும் மைத்திரிபால இருவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும்.

    என்னால் ஒன்றை உறுதிபட கூறமுடியும். அதாவது ரவூப் ஹக்கீம் அரசாங்கத் தரப:புடன் பேச்சுக்களில் ஈடுபகிறாரேயன்றி, இதுவரை அரசாங்கத் தரப்புடன் எந்தவொரு இறுதி இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்பதுடன், எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுமே ஆகும் எனவும் ஹசன் அலி மேலும் கூறினார்.
    ALJAZEERALANKA.COM
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்ல நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகள் இல்லை: ஹசன் அலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top