தனது கணவரான அதிபரை வெறுப்பேத்துவதற்காக
அவருடைய கைத் தொலைபேசியில் இருந்து பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு ’ஹாய்
செல்லம்” என எஸ்.எம்.எஸ் போட்டு பெரிய பிரளயததையே உருவாக்கியுள்ளாா்
வலிகாமமத்தில் உள்ள பாடசாலையின் அதிபாின் மனைவி.
பாடசாலை அதிபா் வீட்டுக்கு தொடா்ந்து
பிந்தி வருவதால் சந்தேகப்பட்ட மனைவி அவா் தவறுதலாக தனது கைத் தொலைபேசியை
விட்டு விட்டு வெளியே சென்ற பின் அந்த தொலைபேசியை எடுத்து ஆராய்ந்துள்ளார்.
அப்போது அந்தத் தொலைபேசியில்
சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிபரின் பிறந்த தினத்திற்கு புகைப்பட
எஸ்.எம்.எஸ் போட்டிருந்த ஒரு நம்பருக்கு ‘ஹாய் செல்லம்‘ என
அனுப்பியுள்ளார்.
அதற்கு ” என்ன சோ் இது” என பதில் வந்ததால் உடனடியாக அந்த எஸ்.எம்.எஸ் சை அழித்துவிட்டு பேசாது இருந்துவிட்டார்.
இதன் பின்னா் அடுத்தநாள் பாடசாலை போய்
அதிபா் தனியே இருந்த போது மனைவி அனுப்பி எஸ்.எம்.எஸ் குரிய ஆசிரியை வந்து
அதிபரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது அதிபா் அதிர்ந்துள்ளார்.
இதன் பின்னா் அதிபா் எஸ்.எம்.எஸ் வந்த
நேரத்தைப் பார்த்து அறிந்து உடனடியான தொலைபேசி எடுத்து மனைவியைத் தொடா்பு
கொண்ட போது மனைவி சிரித்தவாறு தான்தான் சும்மா அனுப்பியது என
தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த புகைப்பட எஸ்.எம்.எஸ் வந்ததால்தான் தான் அனுப்பியாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதிபா் கதைக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த ஆரிசியை அதன் பின்னா் நிம்மதியானதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment